முதல்வர் பழனிச்சாமி உறுதி: டிஎன்பிஎஸ்சி முறைகேட்டில் ஈடுபட்டவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை

2 second read
0
0
Edappadi

சென்னை: 

2019-ம் ஆண்டு நடபெற்ற டி.என்.பி.எஸ்.சி. குரூப்-4, குரூப்-2ஏ தேர்வுகளில் நடைபெற்ற மோசடிகள் தொடர்பாக சி.பி.சி.ஐ.டி. போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகிறார்கள். 

விசாரணையின் போது 2016 மற்றும் 2017 ஆகிய ஆண்டுகளில் நடபெற்ற தேர்வுகளிலும் பலர் மோசடியில் ஈடுபட்டது விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த தேர்வு முறைகேடுகள் தொடர்பாக இதுவரை 50-க்கும் மேற்பட்டோர் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், தமிழக சட்டசபையில் பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று நடைபெற்றது. கூட்டத்தின் போது டி.என்.பி.எஸ்.சி. முறைகேடு தொடர்பாக எதிர்கட்சிகள் சார்பில் கேள்விகள் எழுப்பப்பட்டது.

அப்போது பேசிய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி:

டி.என்.பி.எஸ்.சி தேர்வுகள் நடைபெற்ற இரண்டு மையங்களில் மட்டுமே முறைகேடுகள் நடைபெற்றுள்ளன. இந்த முறைகேட்டில் ஈடுபட்டவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். மேலும், டி.என்.பி.எஸ்.சி ஒரு தன்னாட்சி பெற்ற அமைப்பாகும். அதில் மாநில அரசு தலையிடுவதில்லை 

Load More Related Articles
Load More By admin
Load More In கல்வி செய்திகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Check Also

சென்னையில் குடிநீர் கேன் தட்டுப்பாடு அபாயம், 2வது நாளாக தொடரும் வேலை நிறுத்தம்

சென்னை: குடிநீர் கேன் உற்பத்தியாளர்கள் இரண்டாவது நாளாக வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்…