சென்னையில் குடிநீர் கேன் தட்டுப்பாடு அபாயம், 2வது நாளாக தொடரும் வேலை நிறுத்தம்

7 second read
0
0
water cans demands

சென்னை: குடிநீர் கேன் உற்பத்தியாளர்கள் இரண்டாவது நாளாக வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் சென்னையில் குடிநீர் கேன்களுக்கு தட்டுப்பாடு அபாயம் எழுந்துள்ளது. அத்துடன் குடிநீர் கேன்களின் விலை கடுமையாக உயரும் அபாயமும் ஏற்பட்டுள்ளது.

தமிழகத்தில் சட்ட விரோதமாக தொழிற்சாலைகள், வணிக நிறுவனங்கள் அதிக அளவில் நிலத்தடி நீரை உறிஞ்சிய காரணத்தால் நிலத்தடி நீர் மட்டம் கடுமையாக சரிந்துள்ளது. தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் நிலத்தடி நீர் மட்டம் 300 முதல் 500 அடிக்கு கீழ் சென்றுவிட்டது. இதனால் தமிழகத்தில் 32 மாவட்டங்களில் 471 அபாயகரமான பிர்காவில் நிலத்தடி நீர் எடுக்க தமிழக அரசு தடை விதித்து இருக்கிறது.

ஆனால் அதேநேரம் குடிநீர் பயன்பாட்டுக்காக நிலத்தடி நீர் பயன்படுத்த தடையில்லா சான்றிதழ் பெற்று எடுத்துக் கொள்ளலாம் என்று தமிழக அரசு கூறியது. எனினும் தமிழக அரசு குடிநீர் கேன் நிறுவனங்களுக்கு தண்ணீர் எடக்க அனுமதி தரவில்லை.

அதிரடி தடை இதையடுத்து குடிநீரை நிலத்தடி நீரை சட்டவிரோத உறிஞ்சும் தண்ணீர் நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் வழக்கு ஒன்றில் நேற்று உத்தரவிட்டுள்ளது. இதை செய்யாவிட்டால் தலைமை செயலாளரை நேரில் ஆஜராக உத்தரவிடுவோம் என்று உயர்நீதிமன்றம் எச்சரித்துள்ளது.

6மணி முதல் இதனால் அதிர்ச்சி அடைந்த குடிநீர் கேன் உற்பத்தியாளர்கள் சங்கத்தினர் நேற்று மாலை 6மணி முதல் காலவரையற்ற வேலைநிறுத்ததில் இறங்கியுள்ளனர். சென்னையில் சுமார் 500 குடிநீர் கேன் உற்பத்தி நிறுவனங்களும், மாநிலம் முழுவதும் 1627 குடிநீர் நிறுவனங்களும் குடிநீர் கேன்களை உற்பத்தி செய்து வருகின்றன.

https://tamil.oneindia.com/news/chennai/tamil-nadu-drinking-water-cane-association-continue-strike-2-day-shortage/articlecontent-pf438819-378347.html

Load More Related Articles
Load More By admin
Load More In செய்திகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Check Also

டிரம்ப் வருகை எதிரொலி: அகமதாபாத் சேரி பகுதியில் தங்கியிருந்த 45 குடும்பத்தினரை உடனே வெளியேறும்படி நோட்டீஸ்

அமெரிக்க அதிபர் தனது மனைவி எலினா உடன் இரண்டு நாள் சுற்றுப்பயணமாக நமது பாரத தேசமான இந்தியாவ…