சென்னையில் குடிநீர் கேன் தட்டுப்பாடு அபாயம், 2வது நாளாக தொடரும் வேலை நிறுத்தம்
சென்னை: குடிநீர் கேன் உற்பத்தியாளர்கள் இரண்டாவது நாளாக வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் சென்னையில் குடிநீர் கேன்களுக்கு தட்டுப்பாடு அபாயம் எழுந்துள்ளது. அத்துடன் குடிநீர் கேன்களின் விலை கடுமையாக உயரும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் சட்ட விரோதமாக தொழிற்சாலைகள், வணிக நிறுவனங்கள் அதிக அளவில் நிலத்தடி நீரை உறிஞ்சிய காரணத்தால் நிலத்தடி நீர் மட்டம் கடுமையாக சரிந்துள்ளது. தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் நிலத்தடி நீர் மட்டம் 300 முதல் 500 அடிக்கு கீழ் சென்றுவிட்டது. இதனால் தமிழகத்தில் 32 மாவட்டங்களில் 471 அபாயகரமான …