முதல்வர் பழனிச்சாமி உறுதி: டிஎன்பிஎஸ்சி முறைகேட்டில் ஈடுபட்டவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை
சென்னை: 2019-ம் ஆண்டு நடபெற்ற டி.என்.பி.எஸ்.சி. குரூப்-4, குரூப்-2ஏ தேர்வுகளில் நடைபெற்ற மோசடிகள் தொடர்பாக சி.பி.சி.ஐ.டி. போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகிறார்கள். விசாரணையின் போது 2016 மற்றும் 2017 ஆகிய ஆண்டுகளில் நடபெற்ற தேர்வுகளிலும் பலர் மோசடியில் ஈடுபட்டது விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த தேர்வு முறைகேடுகள் தொடர்பாக இதுவரை 50-க்கும் மேற்பட்டோர் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில், தமிழக சட்டசபையில் பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று நடைபெற்றது. கூட்டத்தின் போது டி.என்.பி.எஸ்.சி. முறைகேடு தொடர்பாக எதிர்கட்சிகள் சார்பில் கேள்விகள் எழுப்பப்பட்டது. அப்போது பேசிய முதல்வர் …