நிர்பயாவின் தாயார் சந்தேகம் இந்த முறையாவது குற்றவாளிகளை தூக்கிலிட பெறுவார்களா

0 second read
0
0
nirbhayas-mother

டில்லியில் மருத்துவ படிப்பு படித்து வந்த மாணவி நிர்பயா பாலியல் கொடுமை வழக்கில்  கைது செய்யப்பட்ட பவன் குப்தா, அக்ஷய் தாகூர், முகேஷ் சிங், வினை சர்மா ஆகியோருக்கு டெல்லி நீதிமன்றம் தூக்கு தண்டனை விதித்தது.

இந்த தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட விருந்த கடந்த ஜனவரி 22ஆம்  தேதியிலிருந்து பிப்ரவரி 1ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. ஆனாலும் இந்த நான்கு குற்றவாளிகளும் தண்டனையிலிருந்து தப்பிக்க புதிய மனுக்களை தாக்கல் செய்ததால்  தூக்கிலிடுவது நிறுத்தி வைக்கப்பட்டது.

இந்த நிலையில்  நான்கு குற்றவாளிகளுக்கு தண்டனையை நிறைவேற்றுவதற்கான புதிய தேதியை  அளிக்குமாறு நிர்பயாவின் பெற்றோர் சார்பில் டெல்லி பாட்டியாலா ஹவுஸ் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனுவின் மீது நடைபெற்ற விசாரணையில் நான்கு குற்றவாளிகளையும் வருகிற மார்ச் மூன்றாம் தேதி அதிகாலை 6  ஆறு மணிக்கு தூக்கிலிட நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஆனால் நிர்பயாவின் தாயார் கூறுகையில் இந்த முறையாவது ஈடுபடுவார்களா என கேள்வி எழுப்பி உள்ளார்.  இதற்கான பதிலை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Load More Related Articles
Load More By admin
Load More In சட்டம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Check Also

சென்னையில் குடிநீர் கேன் தட்டுப்பாடு அபாயம், 2வது நாளாக தொடரும் வேலை நிறுத்தம்

சென்னை: குடிநீர் கேன் உற்பத்தியாளர்கள் இரண்டாவது நாளாக வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்…